நேஷனல் ஹெரால்டு ‘ பத்திரிகை முறைகேடு தொடர்பான புகாரில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் மாளிகை நோக்கி செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தடுத்ததால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சைதாப்பேட்டை ராஜீவ் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் ஆளுநர் மாளிகை வாயில் அருகே வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளில் ஏறி குதித்து செல்ல முற்பட்டனர். அவர்களை பின்னால் ஓடி வந்த போலீசார் உடனடியாக மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் கே.எஸ்.அழகிரி உட்பட போராட்டக்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் கிண்டி ரேஷ் கோர்ஸ் மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.