மத்திய அரசு ஊழியர்களுக்கான அடுத்தடுத்து முக்கிய அறிவிப்புகள் இந்த ஜூன் மாதம் வர உள்ளது மட்டும் அல்லாமல் சம்பளத்தில் பெரும் தொகை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
இந்த ஜூலை மாதத்தில் திட்டமிட்டப்பட்டி அனைத்தும் நடந்தால் மத்திய அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி தான் என்றும் சொன்னாலும் மிகையில்லை.
3 முக்கிய அறிவிப்பு
ஜூலை மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு, 18 மாத DA அரியர் தொகை, மற்றும் பிஎப் தொகைக்கான வட்டி விகிதம் ஆகிய 3 முக்கியமான விஷயங்கள் குறித்து மத்திய அரசு அறிவிக்க உள்ளது. இது ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் மிகப்பெரிய அளவில் வருமானம் கிடைக்கும். இது பல மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் ஆக இருக்கும்.
டிஏ உயர்வு
அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி-யை மத்திய அரசு திருத்தி அறிவிக்கப்படும். ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஜூலை DA உயர்வு
ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் AICPI 126க்கு மேல் இருந்தால் அகவிலைப்படி 4 சதவீதம் வரை உயரக்கூடும் எனச் சந்தை ஆய்வுகள் கூறுகிறது. தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 34 சதவீதம் டிஏ வழங்கப்படுகிறது. ஜூலை மாதம் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டால், அவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து சுமார் 38 சதவீத அகவிலைப்படி கிடைக்கும்.
18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை
மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி (டிஏ) நிலுவைத் தொகையைச் செலுத்துவது குறித்த அறிவிப்புகள் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. புதிய அறிக்கைகளின்படி, ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத கால DA நிலுவைத் தொகையைச் செலுத்துவது தொடர்பான பிரச்சினை விரைவில் மத்திய அரசு களையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.2 லட்சம்
மத்திய அரசு ஊழியர்கள் ஒரே நேரத்தில் ரூ.2 லட்சம் நிலுவைத் தொகையும் கிடைக்கும் என்பது கடினம் காரியம் என்றாலும் பகுதி பகுதியாகச் செலுத்த மோடி அரசு முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
EPF வைப்பு நிதி வட்டி
2021-22 நிதியாண்டிற்கான EPFO உறுப்பினர்களின் கணக்குகளில் EPF வைப்பு நிதிக்கு 8.10% வருடாந்திர வட்டி வருமானத்தை அளிக்க மத்திய கருவூல அமைப்பு அறிவித்துள்ளது. இந்த வட்டி பணம் ஜூலை மாதத்தில் இருந்து அனைத்து EPFO உறுப்பினர்களின் கணக்குகளில் வைப்பு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7th pay commission: 4% DA hike, 18-months arrear, PF interest rate Big announcement in july
7th pay commission: 4% DA hike, 18-months arrear, PF interest rate Big announcement in july ஜூலை மாதத்தில் 3 ஜாக்பாட்.. யாருக்கெல்லாம் லாபம்..!