இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பெரியகரசப்பாளையத்தை சேர்ந்த அருண்(27)கூலி தொழிலாளி ஆவார். இவர் மனைவி ஐஸ்வர்யாவுடன் இருசக்கர வாகனத்தில் பரமத்திவேலூர் சென்றுள்ளார்.
பின்பு அங்கிருந்து இருவரும் ஊருக்கு செல்வதற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது பொய்யேரி அருகே ஒழுகூர்பட்டி பிரிவு சாலையில் திரும்ப முயன்ற போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த அருண், ஐஸ்வர்யா மற்றும் மற்றொரு வாகனத்தில் வந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த தேவராஜ் ஆகிய 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில் அருணை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.