வேலையின்மை என்பது பல நாடுகளும் எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும்.
நகர்ப்புறங்களில் 15 வயது அல்லது அதற்கு மேலான நபர்களுக்கான வேலையின்மை விகிதம் ஜனவரி – மார்ச் 2022 காலாண்டுகளில் 9.3%ல் இருந்து, 8.2% ஆக குறைந்துள்ளதாக என் எஸ் ஓ (NSO) தரவுகள் சுட்டிக் காட்டுகின்றது.
வேலையின்மை அல்லது வேலையின்மை விகிதம் என்பது தொழிலாளர்களில் உள்ள வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கையாகும்.
என்ன காரணம்?
கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்கு விதிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக, ஜனவரி – மார்ச் காலாண்டில் வேலையின்மை விகிதமானது அதிகமாக இருந்தது. அக்டோபர் – டிசம்பர் 2021 காலாண்டில் 15 வயது அல்லது அதற்குமேற்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதமானது நகர்புறங்களில் 8.7% ஆக இருந்தது என PLFS தரவு சுட்டிக் காட்டுகின்றது.
பெண்கள் வேலையின்மை
நகர்புறங்களில் பெண்களிடையே (15 வயது அல்லது அதற்கு மேல்) வேலையின்மை விகிதம் ஒரு வருடத்திற்கு முன்பு 11.8%ல் இருந்து, மார்ச் 2022ல் 10.1% ஆக குறைந்துள்ளது. இது அக்டோபர் – டிசம்பர் 2021ல் 10.5% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் வேலையின்மை
ஆண்களில் நகர்புறங்களில் வேலையின்மை விகிதம் 2022 ஜனவரி – மார்ச் 2022ல் 7.7% ஆக குறைந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இந்த விகிதம் 8.6% ஆக இருந்தது. இது அக்டோபர் – டிசம்பர் 2021ல் 8.3% ஆக இருந்தது.
தற்போதைய வாராந்திர நிலை?
நகர்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான தற்ப்போதைய CWS விகிதம் ஜனவரி – மார்ச் 2022ல் 47.3% ஆக குறைந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 47.5% ஆக இருந்தது. இது அக்டோபர் – டிசம்பர் 2021ல் 47.3% ஆகவும் இருந்தது.
என் எஸ் ஓ ஏப்ரல் 2017ல் PLFS அடிப்படையில் வேலையின்மை விகிதம், தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் (WPR), தொழிலாளர் படை பங்கேற்பு விகிதம் (LFPR) உள்ளிட்டவற்றை வழங்குகிறது.
Unemployment rate dips to 8.2 percent in march quarter: NSO
NSO data show that the unemployment rate for those aged 15 and over in urban areas fell to 8.2% from 9.3% in the January – March 2022 quarter.