வாஷிங்டன் : பெங்களூரில் உள்ள விவேகானந்தா யோகா பல்கலை, அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் புதிய வளாகம் அமைக்க திட்டமிட்டுள்ளது.கர்நாடகாவின் பெங்களூரில் 2002ல் துவக்கப்பட்ட விவேகானந்தா யோகா பல்கலை, உலகின் முதல் யோகா பல்கலை என்ற பெருமை உடையது. இதன் வேந்தராக எச்.ஆர். நாகேந்திரா பதவி வகிக்கிறார். இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகர் வளாகத்தின் முதல் பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடந்தது. அதில், 23 பேர் முதுகலை பட்டம் பெற்றனர்.
அப்போது, வேந்தர் நாகேந்திரா கூறியதாவது:அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் யோகா பல்கலை வளாகம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக, நியூயார்க் நகரில் வசிக்கும் இந்தியர் பிரேம் பண்டாரியிடம் பேசி வருகிறோம். அமெரிக்காவில் யோகா பயிற்சியாளர்கள், ஆசிரியர்களின் தேவை அதிகரித்து வருகிறது. அதற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முயற்சிதான் காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.
வாஷிங்டன் : பெங்களூரில் உள்ள விவேகானந்தா யோகா பல்கலை, அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் புதிய வளாகம் அமைக்க திட்டமிட்டுள்ளது.கர்நாடகாவின் பெங்களூரில் 2002ல் துவக்கப்பட்ட
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.