குழந்தையின் இறப்பு குறித்து நிலவும் மர்மம்: விசாரணை 1வருடத்தை கடந்ததால் பொலிஸார் வருத்தம்!


பிரித்தானியாவின் வால்சாலில் உள்ள ரஃப் வுட் கன்ட்ரி பார்க் அருகே ஒரு வருடத்திற்கு முன்பு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண்குழந்தை குறித்து, இதுவரை எத்தகைய அடையாளங்களும் கண்டெடுக்கப்படவில்லை என வருத்ததுடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் வால்சாலில் உள்ள ரஃப் வுட் கன்ட்ரி பார்க் வழியாக நடந்து சென்றபோது வயர்லி மற்றும் எசிங்டன் இருவரும் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கால்வாய் அருகே கிடப்பதை கண்டெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து குழந்தையின் கொலை வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கிய வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை, இதுத் தொடர்பாக தகவல் கொடுப்பவர்களுக்கு £ 5,000 வெகுமதியை வரை வழங்கியது.

குழந்தையின் இறப்பு குறித்து நிலவும் மர்மம்: விசாரணை 1வருடத்தை கடந்ததால் பொலிஸார் வருத்தம்!

மேலும் துப்பறியும் விசாரணை குழு இறந்து கிடந்த சிறுவனிடம் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் மற்றும் உடல் கண்டெடுக்கப்பட்ட இடங்களிலும் தடயவியல் ஆய்வு நடத்தியது.

இருப்பினும் உடல் கண்டெடுக்கப்பட்டு ஓன்பது மாதங்கள் பிறகும் குழந்தையின் தாயார் யார் என்று பொலிசாரால் கண்டுப்பிடிக்கப்படாத நிலையில் சிறுவனின் குறித்த அடையாளம் மர்மமாகவே இருந்து வருகிறது.

இந்தநிலையில், விசாரணை காவல் அதிகாரி இன்ஸ்பெக்டர் மிச்செல் துர்குட் தெரிவித்த கருத்தில், குழந்தைக்கு என்ன நடந்து உள்ளது என்பதை புரிந்து கொள்வதில் அதிகாரிகள் இன்னும் முன்னோக்கி செல்லவில்லை, ஆனால் ‘உண்மையைக் கண்டறிய முயற்சிக்க வேண்டும்’ என்று கூறியதோடு, தகவல் தெரிந்த எவரையும் முன்வருமாறு வலியுறுத்தியுள்ளார்.

குழந்தையின் இறப்பு குறித்து நிலவும் மர்மம்: விசாரணை 1வருடத்தை கடந்ததால் பொலிஸார் வருத்தம்!

அத்துடன் இந்த வழக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்தச் சிறுவனுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிய நாங்கள் அயராது உழைத்தோம். இன்றுவரை அவருக்கான பதில்களைப் பெற முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது எனத் தெரிவித்தார்.

மேலும் எனது எண்ணங்கள் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் உள்ளன, மேலும் எனக்குத் தெரிந்த பரந்த சமூகம் இந்த சோகமான கண்டுபிடிப்பால் ஆழ்ந்த துயரத்தில் இருந்தது. இதுவரை எங்களுக்கு தகவல்களை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் அனைத்து விசாரணைகளும் செயல்பட்டதாக உறுதியளிக்கிறேன்.

குழந்தையின் உடல் கருப்ப நாட்டு மரண விசாரணை(Black Country coroner) அதிகாரியின் பராமரிப்பில் உள்ளது.

குழந்தையின் இறப்பு குறித்து நிலவும் மர்மம்: விசாரணை 1வருடத்தை கடந்ததால் பொலிஸார் வருத்தம்!

அவரது குடும்பத்தினர் முன்வரவில்லை என்றால், ‘மிகவும் உணர்திறன் வாய்ந்த’ இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்வோம் என்று போலீசார் கூறுகின்றனர்.

கூடுதல் செய்திகளூக்கு:ரூவாண்டா பயண திட்டத்திற்கான தடை: ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு பிரித்தானிய கண்டனம்!

எந்தவொரு தகவலும் உள்ள எவரும் எங்கள் இணையதளத்தில் நேரலை அரட்டை மூலம் எங்களைத் தொடர்புகொள்ளலாம் அல்லது 20 மே 2021 இன் பதிவு எண் 1963 என்ற 101 ஐ அழைக்கலாம் எனத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.