ஜம்மு-காஷ்மீருக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரமுல்லாவில் ராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து உணவருந்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக வந்த அவர், ராணுவத்தின் ஏடிவி வாகனத்தை தானே ஓட்டி வந்தார்.
எல்லைப்பகுதிக்கு சென்று ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடவிருக்கும் அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை ஜம்முவில் நடைபெறும் மகாராஜா குலாப்சிங்கின் 200 வது ஆண்டு விழாவிலும் பங்கேற்கிறார்.