கென்யாவில் உள்ள தேசிய பூங்காவில் ஆற்றுக்கு நடுவில் சிங்கத்தை முதலைகள் சுற்றி வளைத்த காட்சி இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றனர்.
மசாய் மாரா தேசிய பூங்காவில் நீர்யானை ஒன்றின் சடலத்தின் மீது நின்றிருந்த சிங்கத்தை தப்பிக்க விடாமல் இருப்பதற்காக சுமார் 40 முதலைகள் அதனை சுற்றி வளைத்து நின்றன.
பின்னர், திடீரென தண்ணீரில் குதித்த அந்த சிங்கம், முதலை கூட்டத்திடம் சிக்காமல் வேகமாக நீந்தி கரைக்கு சென்று தப்பியது. ஆண்டனி பெசி என்பவரால் எடுக்கப்பட்ட அந்த வீடியோவை ஏராளமானோர் பகிர்கின்றனர்.