திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையில் விஷவாயு தாக்கியதில் பாதிக்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் உள்ள தனியார் தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பம்ப் அறையில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் 3 பேர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென கழிவு நீர் வெளியேறியதை அடுத்து விஷவாயு தாக்கியதில் மூன்று தொழிலாளர்களும் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர்.
பாதிக்கப்பட்ட 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நவீன் குமார் என்பவர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.