மதுரை மாவட்டத்தில் பெண்ணை பிளேடால் கிழித்து தப்பி ஓடிய தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்த சேகரின் மனைவி தனலட்சுமி. சேகர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்நிலையில் தனலட்சுமி சாத்தாங்குடியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சேகரிடம் கடந்த 3 ஆண்டுகளாக பழகி வந்துள்ளார்.
இதையடுத்து கடந்த சில நாட்களாக தனலட்சுமி சேகருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த சேகர் திருமங்கலம் ரயில் நிலையம் அருகே தனலட்சுமியை மறித்து தகராறு செய்துள்ளார்.
இதில் இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில், சேகர் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனலட்சுமியின் உதடு, கை, கால்களில் சரமாரியாக தாக்கி கிழித்துள்ளார்.
இதனால் காயமடைந்த தனலட்சுமி சத்தம் போடவே சேகர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் தனலட்சுமியை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சேகரை தீவிரமாக தேடி வருகின்றனர்.