குழந்தையின் கல்விக்காக ரூ.1 கோடி இலக்கு.. எவ்வளவு முதலீடு செய்யணும்.. எதில் முதலீடு செய்யலாம்?

கொரோனாவின் வருகைக்கு பிறகு முதலீட்டின் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக மியூச்சுவல் ஃபண்டுகள் மீதான ஆர்வம் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

இது குறித்து 30 வயதான ரமேஷ் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளதாகவும், அவருக்கு 15 ஆண்டுகளில் 2 கோடி ரூபாய் கார்ப்பஸினை உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதில் தனது குழந்தையின் எதிர்கால கல்வி செலவினங்களுக்காக 1 கோடி ரூபாயும், ஓய்வுகாலத்திற்கு 1 கோடி ரூபாய் கார்பஸினையும் உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ரூபாய் மதிப்பின் வரலாற்று சரிவுக்கு என்ன காரணம்..? சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு..?!

என்னென்ன ஃபண்டுகளில் முதலீடு?

என்னென்ன ஃபண்டுகளில் முதலீடு?

ஆக ரமேஷ் எதில் முதலீடு செய்யலாம், எதில் முதலீடு செய்தால் அவரது கார்ப்பஸ் இலக்கினை அடைய முடியும். அவரின் குழந்தையின் வயது 1 எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே மாதம் 30,000 ரூபாய் முதலீட்டினை எஸ் ஐ பி மூலமாக முதலீடு செய்து வருவதாகவும், இதனை குவாண்ட் ஆக்டிவ் ஃபண்ட், நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட், டாடா டிஜிட்டல் இந்தியா ஃபண்ட், நிப்பான் இந்தியா பார்மா ஃபண்ட் உள்ளிட்ட பங்குகளில் முதலீடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ரூ.1 கோடி கார்ப்பஸ்

ரூ.1 கோடி கார்ப்பஸ்

ஏற்கனவே உங்களது மகளின் கல்விக்கான தற்போதைய போர்ட்போலியோ 4 லட்சம் ரூபாயாக இருக்கும் என வைத்துக் கொள்வோம். அடுத்த 16 ஆண்டுகளுக்கு 1 கோடி ரூபாய் கார்ப்பஸினை உருவாக்க வருடத்திற்கு 10% வருமானம் என வைத்துக் கொள்வோம். மாதம் 18,000 ரூபாயினை முதலீடு செய்ய வேண்டும். இதே 12% வருமானம் கிடைப்பதாக வைத்துக் கொண்டால், மாதம் 14000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

 எவ்வளவு செய்ய வேண்டும்.
 

எவ்வளவு செய்ய வேண்டும்.

உங்களது ஒய்வுகால கார்பஸ் இலக்கினை அடைய 10% வருமானம் என கணக்கில் கொண்டால், 50,000 ரூபாயினை மாத எஸ் ஐ பி ஆக செய்ய வேண்டியிருக்கும்.இதே 12% வருமானமாக வைத்துக் கொண்டால், மாதம் 42,000 ரூபாய் முதலீட்டினை செய்ய வேண்டியிருக்கும். ஆக மொத்தம் இர்ண்டினையும் அடைய ஒவ்வொரு மாதமும் 56,000 ரூபாய் முதல் 68,000 ரூபாய் வரையில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

இது அதிகமாக இருக்கே?

இது அதிகமாக இருக்கே?

நீங்கள் ஒவ்வொரு மாதமும் 30,000 ரூபாய் முதலீடு செய்து வரும் நிலையில் இது கடினமாக தோன்றலாம். ஆக ஒவ்வொரு ஆண்டிலும் உங்களது எஸ் ஐ பி-யினை 12% அதிகரித்தால், அதன் மூலம் இரு இலக்குகளையுமே அடைய முடியும்.

உங்களது போர்ட்போலியோவில் சிறந்த ஃபண்டுகளை தேர்வு செய்யலாம். சந்தைகள் சிறப்பாக செயல்படும். கடந்த 2 வருடங்களில் நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கியதிலிருந்து, நிதித் தேர்வு என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான சிறந்த வழி அல்ல.

 

இந்த ஃபண்டுகள் வேண்டாம்

இந்த ஃபண்டுகள் வேண்டாம்

தற்போது நீங்கள் டிஜிட்டல் மற்றும் பார்மா போன்ற கருப்பொருள் மற்றும் துறை சார்ந்த செக்டோரல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறீர்கள். இந்த ஃபண்டுகளில் ரிஸ்க் அதிகம். ஆக இதனை தவிர்க்கலாம். சந்தை மூலதனம் மற்றும் துறைகளில் பல்வகைப்படுத்தலாம்.

பரிந்துரை

பரிந்துரை

யுடிஐ நிஃப்டி இன்டெக்ஸ் ஃபண்ட், மிரே அசெட் லார்ஜ் கேப், பராக் பரிக் ஃபிளெக்ஸி கேப், கனரா ரோபெகோ எமர்ஜிங் ஈக்விட்டீஸ், நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட், குவாண்ட் ஆக்டிவ் ஃபண்ட் உள்ளிட்ட பங்குகளில் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்;.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Need Rs 1 crore for a child’s future education? Where to invest? how much should invest?

Create Rs 1 crore for the child’s future education expenses and Rs 1 crore corpus for retirement. So how much do you want to invest in any fund?

Story first published: Thursday, June 16, 2022, 17:43 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.