தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மாணவரிடம் சாதி ரீதியாக பேசிய விவகாரத்தில் அரசுப்பள்ளி ஆசிரியைகள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
குளத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றிய கலைச்செல்வியும் கணினி ஆசிரியராக பணியாற்றிய மீனாவும், அதே பள்ளியில் பயிலும் மாணவரிடம் சாதி உணர்வைத் தூண்டும் வகையில் பேசிய ஆடியோ அண்மையில் வெளியாகிது.
இதனையடுத்து ஆசிரியைகள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.