ஜர்னலிஸ்ட் ரோலுக்கு கனிமொழி ரெஃபரன்ஸ்… சுந்தர் சி பட நடிகை வித்தியாச ப்ளான்!

தமிழ் சினிமாவில் இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி மற்றும் ஜெய் நடிக்கும் பட்டாம்பூச்சி படத்தின் மூலம் 8 வருடங்களுக்கு பிறகு பிரபல மலையாள நடிகை ஹனிரோஸ் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். பத்ரி இயக்கும் புலனாய்வு திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படம், 1980-களில் நடைபெறுவது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 8 வருட்ங்களுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுப்பது குறித்து ஹனி ரோஸ் கூறுகையில்,

​​“என்னுடைய முதல் படமான முதல் கனவேக்குப் பிறகு, ஜீவாவுடன் (சிங்கம் புலி) சில படங்களில் நடித்தேன், ஆனால் அதன் பிறகு ஒரு சிறிய இடைவெளி விழுந்தது. இதனால் அடுத்து தமிழில் அதிக முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிக்க விரும்பினேன். அந்த நேரத்தில் மலையாளத்தில் நிறைய படவாய்ப்புகள் வந்தது. இதனால் தமிழில் பெரிய இடைவெளி ஏற்பட்டது.

“உண்மையில், எனக்கு பிடித்த மொழிகளில் தமிழும் ஒன்றாகும், நான் தமிழில் பேசுவதை ரசிப்பேன். விஜய் சார் ரஜினிகாந்த் படங்களை பார்த்ததால் தமிழ் பேசுவது எனக்கு எப்பொழுதும் எளிதாக இருந்தது. நான் விஜய் சாரின் தீவிர ரசிகை என்று கூறியுள்ளார். மேலும பட்டாம்பூச்சி படத்தை தேர்வு செய்தது குறித்து பேசிய அவர், பட்டாம்பூச்சி படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று தயாரிப்புக் குழுவினரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

பத்ரி சார் என்னிடம் கதை சொன்னார், எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது. பின்னர், அவர் எனக்கு முழு ஸ்கிரிப்டை அனுப்பினார், அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது, குறிப்பாக என்னுடைய கேரக்டர் ஒரு குறிப்பிடத்தக்க கேரக்டராக இருக்கும். படத்தின் ஒரு முக்கிய பெண் பாத்திரம் இதுவாக இருக்கலாம். ஒரு பத்திரிக்கையாளரான நான் ஒருவரைச் சந்திக்கச் செல்கிறேன், அப்படித்தான் கதை தொடங்குகிறது.

ஆனால் படத்தில் சுந்தர் சி ஜோடியாக நடிக்கிறாரா என்பதை அவர் கூறவில்லை. எனது பெரும்பாலான காட்சிகள் சுந்தர் சி மற்றும் ஜெய்யுடன் இருப்பதாக இருக்கிறது. “நான் ஜெய்யுடன் படப்பிடிப்பில் இருக்கும்போதெல்லாம் அவரிடம், ‘ஐயோ, நீங்க வந்தீங்கனாவே எனக்கு பயமா இருக்கு’ என்று சொல்வேன்,”

இந்த பாத்திரத்திற்காக தயாராவதற்கு சில ஹோம்வொர்க் செய்ததாக கூறும் ஹனி ரோஸ் “நான் அந்தக் காலக்கட்டத்தில் உள்ள சில திரைப்படங்களைப் பார்த்தேன், மேலும் அந்த நேரத்தில் நிருபர்கள் எப்படி ஆடை அணிந்தார்கள் என்பதைப் பார்க்க சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்த்தேன்.

கனிமொழி மேடம் 80களில் ஒரு பத்திரிகையாளராக இருந்தார், அவருடைய தோற்றத்தில் இருந்து சில குறிப்புகளை நான் எடுத்திருக்கிறேன், ”என்று கூறியுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தெலுங்கிலும் என்ட்ரி கொடுத்துள்ள ஹனிரோஸ், பாலகிருஷ்ணாவின் 107-வது படத்தின் படப்பிடிப்பில் ராமோஜி பிலிம் சிட்டியில் இருக்கிறார். தமிழைப் போல தெலுங்கு தனக்குப் பழக்கமான மொழி அல்ல, ஆனால் அந்த மொழியைக் கற்க முயற்சி செய்து வருகிறேன். “பல வார்த்தைகள் மலையாளத்தில் இருப்பதைப் போலவே இருக்கின்றன,

மலையாள சினிமாவைச் சேர்ந்தவர் என்பதால், பாலகிருஷ்ணாவின் படத்தின் ஓவர்-தி-டாப் ஸ்டைலுக்கு ஏற்ப மாற்றுவது சவாலாக இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,  அனைவரும் நடிகர்கள், அதனால் என்னை பாதிக்காது. ஒவ்வொரு துறையும் வித்தியாசமானது. தெலுங்கில், ரசிகர்கள் இது போன்ற படங்களை பார்க்க விரும்புகிறார்கள், ”என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.