மாஸ்கோ:ரஷ்யாவில், போதைப்பொருள் கடத்தியதாக, அழகி போட்டியில் பரிசு வென்றவரும், பிரபல மாடலுமான கிறிஸ்டியானா துகினா கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப் பட்டால், அவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். ரஷ்யாவில், 2.5 கிராமுக்கு மேல் போதைப் பொருள் வைத்திருந்தால், 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அந்நாட்டில் சிறையில் உள்ள மூவரில் ஒருவர் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்.இந்நிலையில், அழகி போட்டியில் வென்றவரும், மாடல் அழகியுமான கிறிஸ்டியானா துகினா, 34, அரை கிலோ போதைப் பொருள் வைத்திருந்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
இவர், 2019ல் நடந்த மிஸ் துபாய் அழகிப்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு அழகி போட்டிகளில் அவர் பரிசுகள் வென்றுள்ளார். நீதிமன்றத்தில் இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிகிறது.
மாஸ்கோ:ரஷ்யாவில், போதைப்பொருள் கடத்தியதாக, அழகி போட்டியில் பரிசு வென்றவரும், பிரபல மாடலுமான கிறிஸ்டியானா துகினா கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப் பட்டால், அவருக்கு, 20 ஆண்டு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.