புதுச்சேரி-சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் மார்பக புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மஞ்சுளா ராவ், நாளை புதுச்சேரிக்கு வருகை தந்து மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்.புதுச்சேரி அண்ணா நகர் 14வது குறுக்கு தெரு ராஜிவ் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் அப்போலோ புரோட்டான் இன்பர்மேஷன் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு, சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை துறை மார்பக புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மஞ்சுளா ராவ், நாளை 18ம் தேதி வருகை தருகிறார். அவர், நாளை காலை 10.௦௦ மணி முதல் மதியம் 2.௦௦ மணி வரை, மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். தொடர்ச்சியான மார்பக புற்றுநோய், ஒன்லாபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, மார்பகத்தின் வீரிய கோளாறுகள், மார்பக வலி, பைலோட்ஸ் கட்டி, கேலக்டோஸ்செல், மார்பக புண், மார்பக பாதுகாப்பு அறுவை சிகிச்சை மற்றும் மார்பகம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்.முன் பதிவிற்கு 9677133345, 7299062029 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Advertisement