விஜய் 66 – படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்து வரும் விஜய் 66வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது சென்னையில் நடந்து வருகிறது. சென்னை ஈசிஆர் சாலை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது. அப்போது படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த பொது மக்கள் செல்போன்களில் படமெடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக உடனடியாக அந்த பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. வேறு பகுதியில் தற்போது குடிசை செட் உருவாக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் இந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட இருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது. அதோடு அடுத்தபடியாக வெளிநபர்கள் யாரும் படப்பிடிப்பு தளத்துக்குள் நுழையாமல் இருக்க செக்யூரிட்டி பலப்படுத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.