242 கம்பெனிகள், 279 பணிகள், 389 நிபுணர்கள்… தமிழக தொழில் முனைவோர் இந்த வெப்சைட்-ஐ மிஸ் பண்ணாதீங்க!

‘Valar 4.0’ portal Tamil News: தமிழகத்தில் உள்ள தொழில்முனைவோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் (Tamil Nadu e-Governance Agency – TNeGA) இணைந்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் (DITDS) துறையால் ‘வளர் 4.0’ போர்டல் (Valar 4.0) என்கிற புதிய இணைய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய பக்கத்தின் வளர்ச்சிக்கு ஐஐடி சென்னை (இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ்) உதவி வருகிறது.

இந்த புதிய முயற்சியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டி.மனோ தங்கராஜ் மற்றும் ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் நேற்று புதன்கிழமை தொடங்கி வைத்தனர். “தமிழ்நாட்டில் தேசிய அளவிலான சிறப்பு மையங்கள், ஏராளமான தொழில்முனைவோர், தொழில்துறைகள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர். அவர்களில், MSMEகளின் பங்களிப்பு மிக அதிகம். இந்த போர்டல் தொழில்முனைவோருக்கு பிற சேவை வழங்குநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் தொடர்பான நிபுணர்களைக் கண்டறிய உதவும்.” என்று இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் 29 நகரங்களில் இருந்து 242 நிறுவனங்கள் மற்றும் 122 பயனர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்றும் 279 சேவைகள், 20 திட்டங்கள் மற்றும் 389 நிபுணர்களின் விவரங்கள் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து

இதற்கிடையில் தலைமைச் செயலகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறைக்கு, ‘தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறை’ என தமிழக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளின் வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப செயலர் நீரஜ் மிட்டல் தெரிவித்துள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.