விஜய்டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாக்யலட்சுமி சீரியலில் ராதிக கேரக்டரில் நடித்து வந்தவர் ஜெனிபர். இந்த சீரியலில் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்த வந்த சமயத்தில் ஜெனிபர் திடீரென சீரியலில் இருந்து விலகினார். ராதிகாவின் கேரக்டர் நெகடீவ் கேரக்டராக மாற்றப்போவதாக அறிந்ததால் அதில் இருந்து ஜெனிபர் விலகிவிட்டதாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது ராதிகா கேரக்டரில் நடிகை ரேஷ்மா நடித்து வருகிறார். இந்நிலையில், பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலகிய ஜெனிபர் அப்போது கர்ப்பமாக இருந்ததும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. அதன்பிறகு சில மாதங்களில் அவருக்கு குழந்தை பிறந்தது. தற்போது குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வரும் ஜெனிபர் விரைவில் சின்னத்திரையில் ரீ-எண்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தையுடன் நேரத்தை செலவிட்டாலும் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஜெனிபர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் வெளியிடும் பதிவுகள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில். தற்போது ஜெனிபர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
ஜெனிபரின் அப்பாவும் பிரபல டான்ஸ் மாஸ்டருமாக சின்னா வயது முதிர்வு காரணமாக மரணமடைந்துள்ளார். இது தொடர்பாக வீடியோவில் பேசியுள்ள ஜெனிபர், அப்பா இன்று காலை காலமானார் அந்த துயரத்தை தாங்க முடியவில்லைஃ ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் கால், மெசேஜ் என விசாரிக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் என்னால் பதில் கூற முடியவில்லை என தெரிவித்து கண்ணீருடன் பேசியிருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜெனிபருக்கு ஆறுதல் கூறி வருகினறனர்.