உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு அவ்வபோது சளி பிடிப்பது உண்டு. அதிலும் மழைக்காலங்களில் காய்ச்சல் என்பது பொதுவானது.
இந்த சளி உடலில் சேர்ந்து நெஞ்சில் கட்டிக்கொள்ளும்.
பெரும்பாலும் குழந்தைகளும் வயதானவர்களுக்கும் தான் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும். அதனால் தான் அடிக்கடி சளி பிடித்து அவதிக்குள்ளாவார்கள்.
மருந்து மாத்திரைகள் எல்லாமே சளி பிரச்சனையை வெளியேற்றினாலும் அவை தற்காலிகமானதுதான். இதனை ஒரு சில இயற்கை வழிகள் மூலம் போக்க முடியும்.
அந்தவகையில் சளியை விரட்ட சுவையான நாட்டுகோழி சூப்பை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .
தேவையான பொருட்கள்
- நாட்டுக்கோழி – 1/4 கிலோ
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 1/4 கப்
- தக்காளி – 1
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
- தண்ணீர் – 2 கப்
- கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு சுவைக்கேற்ப
- நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- பட்டை – 1/2 இன்ச்
- ஏலக்காய் – 1
- கிராம்பு – 1
- கறிவேப்பிலை – சிறிது
- மல்லி விதைகள் – 1/2 டீஸ்பூன்
-
சீரகம் – 1/2 டீஸ்பூன்
-
மிளகு – 1/2 டீஸ்பூன்
-
சின்ன வெங்காயம் – 3
- தண்ணீர் – சிறிது
செய்முறை:
- வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாகநறுக்கி கொள்ளவும்.
- மிக்சியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
- நாட்டுக்கோழியையும் நன்கு நீரில் கழுவிக் கொள்ளவும்.
- குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளித்த பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் வெங்காயம் மற்றும் சிறிது உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்பு தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
- அடுத்து கழுவி வைத்துள்ள நாட்டுக் கோழி, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
- பின் அரைத்து வைத்துள்ள மல்லி, சீரக பேஸ்ட்டை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சுவை பார்த்து, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கவும்.
- குக்கரில் உள்ள விசில் போனாலும், குக்கரைத் திறந்து கொத்தமல்லியைத் தூவினால், சுவையான நாட்டுக்கோழி சூப் தயார்!