பொண்டாட்டி இல்லன்னா புரோட்டா சாப்பிட கூடாதா ? கத்தியால் குத்திய கூட்டாளி..!

மனைவி இல்லாதவர் புரோட்டா சாப்பிடக்கூடாது என்று கேலி செய்த வியாபாரியை குத்திக் கொலை செய்ததாக அவரது கூட்டாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நவ்வலடியைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி முத்துவும், வியாபாரி செல்வக்குமாரும் கூட்டாளிகள். மது அருந்தினால் ஒருவருக்கொருவர் கேலியும் கிண்டலுமாக பேசிக்கொள்வது வழக்கம்

வழக்கம் போல் சம்பவத்தன்று இரவு மதுபோதையில் இருந்த செல்வகுமார் ஓட்டலில் சிக்கன்புரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முத்து உன்மனைவி உன்னை விட்டு பிரிந்து 10 வருடங்கள் ஆகிறது நீ எல்லாம் புரோட்டா சாப்பிட்டு என்ன செய்ய போகிறாய் என்று என கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த செல்வக்குமார் வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, நவ்வலடி பஜாரில் இருந்த முத்துவை கழுத்து மார்பு என சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் முத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல்அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உவரி காவல்ஆய்வாளர் செல்வி தலைமையிலான காவல்துறையினர் முத்துவின் சடலத்தை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திலேயே குற்றவாளி செல்வகுமாரை கைது செய்துள்ளனர்.

நண்பர்களுக்கிடையேயான எல்லைமீறிய கேலிப்பேச்சு விபரீதமானதால், ஒருவர் கொலையுண்டதாகவும், மற்றொருவர் கொலையாளியாகி வாழ்க்கையை தொலைத்து ஜெயிலில் கம்பி எண்ணி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.