“ஆட்சி மாறியதும் முதல் கைது செந்தில் பாலாஜி தான்" – அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தனியார் மண்டபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அமலாக்கத்துறை ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியதை தப்பு என்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதேநேரத்தில், கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்புள்ளது என்கிற புகார் குறித்து அவர் வாய் திறப்பதில்லை.

அண்ணாமலை

சமூகவலைதளங்களில் தமிழக அரசு, முதல்வர் குறித்து பதிவிட்டதற்காக இதுவரை பாஜக தொண்டர்கள் 21 பேரை கைது செய்திருக்கிறார்கள். காவல்துறையை, ஏவல்துறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

கர்நாடக அரசு கேட்கிறது என்பதற்காக, மேக்கேதாட்டூ அணை கட்ட அனுமதி கொடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அங்கீகாரம் இல்லை. திமுக அரசின் ஊழலுக்கு உரிய ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறோம். கவர்னரிடமும் புகார் தெரிவித்துள்ளோம்.

செந்தில் பாலாஜி

அரசு தங்கள் கையில் இருக்கும் இன்னும் மூன்றாண்டுகள் திமுக தப்பிக்கலாம். மின்துறை அமைச்சர் தப்பிக்க முடியாது. அரசு மாறும்போது முதல் கைது செந்தில் பாலாஜி தான். அதிமுக உள்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட்டது கிடையாது. தலையிடப் போவதும் கிடையாது.

அந்த கட்சியின் தொண்டர்கள் ஜனநாயக முடிவுப்படி அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யலாம். பாஜக சித்தாந்தம், கொள்கையை தான் முன்னிலைப்படுத்துவோம். எளிய தொண்டர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம். தனி மனிதர்களை எப்போதும் முன்னிலைப்படுத்த மாட்டோம். கோவை – ஷீர்டி தனியார் ரயிலைப் பொறுத்தவரை,

தனியார் ரயில்

மக்கள் தங்களுக்கு எது தேவையோ அதைத் தேர்ந்தெடுத்து பயணிக்கின்றனர். அந்த ரயிலில் செல்ல வேண்டும் என யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அது வேண்டாம் என்றால், ரயில்வே நிர்வாகம் இயக்கும் ரயிலிலும் ஷீர்டி செல்லலாம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.