இந்திய பங்கு சந்தையனது கடந்த சில அமர்வுகளாகவே மிக மோசமான ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கடந்த 5 அமர்வுகளில் மட்டும் சென்செக்ஸ் 3824.49 புள்ளிகள் அல்லது 6.91% சரிவினைக் கண்டுள்ளது.
கடைசியாக கடந்த அமர்வில் மட்டும் சென்செக்ஸ் 1045.60 புள்ளிகள் அல்லது 1.99% சரிவினைக் கண்டு, 51,495.79 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே முன்னதால ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு 1115 புள்ளிகள் அல்லது 2.12% சரிவினைக் கண்டுள்ளது, 51,425.48 புள்ளிகளாக இருந்தது.
சந்தை மதிப்பு சரிவு
இப்படி தொடர்ந்து சந்தையானது ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சரிவிலேயே காணப்படுகின்றது. குறிப்பாக பி எஸ் இ-யில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் சந்தை மதிப்பானது, 15,74,931.56 கோடி ரூபாய் சரிவினைக் கண்டு, 2,39,20,631.65 கோடி ரூபாயாக 5 நாளில் சரிவினைக் கண்டுள்ளது.
என்ன காரணம்?
இது சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், பணவீக்கம் அதிகரிப்பு, அமெரிக்க மத்திய வங்கியின் முடிவு என பல காரணிகளும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது சந்தை சரிவுக்கு முக்கிய காரணிகளாக அமைந்துள்ளது.
சரிவினைக் கண்ட பங்குகள்
கடந்த வியாழக்கிழமையன்று நெஸ்டில் இந்தியா தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் பலத்த சரிவினைக் கண்டன, குறிப்பாக மெட்டல் இன்டெக்ஸ் ஆனது 5% மேலாக சரிவினைக் கண்டிருந்தது. இதன் காரணமாக டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, பார்தி ஏர்டெல், விப்ரோ, இந்தஸ் இந்த் வங்கி, பஜாஜ் பைனன்ஸ், கோடக் மகேந்திரா வங்கி மற்றும் என் டி பி சி உள்ளிட்ட பங்குகாள் பலத்த சரிவினைக் கண்டன.
சரிவில் இன்டெக்ஸ்கள்
இதற்கிடையில் பி எஸ் இ ஸ்மால் கேப் 2.87% சரிவிலும், மிட்கேப் இன்டெக்ஸ் 2.34% சரிவிலும் காணப்பட்டது. மெட்டல் இன்டெக்ஸ் 5.48% சரிவிலும், தொழில்துறை 3.06% டெலிகாம் 3.04%, ரியால்டி 2.69% சரிவிலும், டெக் 2.51%, ஐடி துறை 2.48%, பயன்பாட்டு துறை 2.39% சரிவிலும் காணப்பட்டன. இதில் 2754 பங்குகள் சரிவிலும், 620 பங்குகள் மட்டுமே சற்று ஏற்றத்திலும், 100 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
முதலீடுகள் வெளியேற்றம்
கடந்த புதன்கிழமையன்று அன்னிய நேரடி முதலீடானது 3531.15 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வெளியேறியுள்ளனர். அதிகரித்து வரும் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர, வட்டி விகிதம் அதிகரித்து வருகின்றது. இது பணவீக்கத்தினை குறைக்கலாம் என்றாலும், வளர்ச்சியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Stock market investors lose Rs 15.74 lakh crore in 5 days
Indian stock market has been experiencing the worst volatility in the last few sessions. In particular, the market value of shares listed on the BSE fell by Rs 15,74,931.56 crore in 5 sessions.