ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரயில் விபத்தை ஊழியர் தவிர்த்தார். தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை கண்டு 200 மீட்டர் தூரம் ஓடி ஊழியர் வீரப்பெருமாள் ரயிலை நிறுத்தினார். வாலாந்தரவை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ஊழியர்கள் சரிசெய்து வருகின்றனர்.