தங்கம் விலையானது அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையிலும், பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.
தொடர்ந்து சர்வதேச அளவில் பணவீக்கம் உச்சம் எட்டி வரும் நிலையில், இது ரெசசனுக்கு வழிவகுக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதற்கிடையில் அமெரிக்க வங்கியானது வட்டி விகிதத்தினையும் அதிகரித்துள்ள நிலையில், இது டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுத்துள்ளது.
ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இந்திய ஐடி நிறுவனங்களின் அடுத்த டார்கெட் மத்திய கிழக்கு நாடுகள்..!
ரேஞ்ச் பவுண்டில் தங்கம் விலை
ஆக இப்படி பல காரணிகளுக்கு மத்தியில் எந்த பக்கம் செல்வது என தெரியாமல் தங்கம் விலையானது ஒரே ரேஞ்ச் பவுண்டிலேயே காணப்படுகின்றது. இது இன்று நேற்றல்ல, கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது 1800 – 1860 டாலர்களுக்குள்ளாகவே காணப்படுகின்றது. இது தங்கம் விலையில் இதில் ஏதேனும் ஒரு பக்கம் உடைத்தால் தான் பெரியளவில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாலர் மதிப்பு & பத்திர சந்தை
அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பத்திர சந்தையும் ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைத்துள்ளது. எனினும் தொடர்ந்து பணவீக்கம் உச்சத்தினை எட்டி வரும் நிலையில், இது ரெசசனுக்கு வழிவகுக்கலாமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் விலை ஏற்றம் காண வழிவகுக்கலாமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
பங்கு சந்தைகள் சரிவு
அமெரிக்காவின் பங்கு சந்தை உள்பட பல்வேறு பங்கு சந்தைகளும் சரிவில் காணப்படுகின்றன. இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்க வழிவகுக்கலாம். ஆக இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது இன்னும் சில தினங்களுக்கு சைடுவேயாகவே இருக்கலாம்.
சர்வதேச & இந்திய சந்தை நிலவரம்?
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1849.35 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளியின் விலை சற்று அதிகரித்து, 21.930 டாலராக வர்த்தகமாகி வருகின்றது.
இதே இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 13 ரூபாய் அதிகரித்து, 50,999 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே கிலோ வெள்ளியின் விலையானது, 155 ரூபாய் அதிகரித்து, 61,682 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்திருந்தாலும், ஆபரணத் தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 4,785 ரூபாயாகவும், இதே 8 கிராமுக்கு 160 ரூபாய் அதிகரித்து 38,280 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 5218 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 41,744 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையும் இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. இது தற்போது கிராமுக்கு 66 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 660 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 66,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
gold prices stay range bound amid strong dollar
The price of gold has declined slightly in the international market amid various factors. However, the price of jewelry gold continues to rise.