சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்தை பிறப்பிப்பது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நடராஜின் தற்கொலை ஆன்லைன் சூதாட்ட தடை நீக்கிய பிறகு கடந்த 10 மாதங்களில் 24வது தற்கொலை நிகழ்ந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 2 வாரங்களில் நிகழ்ந்த 3வது உயிரிழப்பு நடராஜன் தற்கொலை. சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதையே நடராஜ் தற்கொலை சம்பவம் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.