இலங்கைக்கான நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் B. H. N. ஜயவிக்ரமவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திய்பு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று (16) இடம்பெற்றது .
கல்வி,சுகாதாரம், விவசாயம், போக்குவரத்து, மீள்குடியேற்றம், குடிநீர் ஏனைய நலன்புரி விடயங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போதுமாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் விவசாயம், மீன்பிடி ஆகிய தொழில்கள் குறித்து தெளிவுபடுத்திய அரசாங்க அதிபர் இம்முறை சிறுபோகத்தில் 28 000 ஹெக்டேயர் நெல்வேளாண்மை பயிர்ச்செய்கை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தற்போது நெருக்கடி மிக்க சூழ்நிலையில் வீட்டுதோட்டப் பயிர்ச்செய்கையை ஊக்கப்படுத்தும் வகையில் மக்களுக்கு தெளிவூட்டல்களை மேற்கொண்டு உற்பத்தி முயற்சிகளை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை ஊக்குவித்து வருகின்றோம். சூரிய மின்சக்தி, சுற்றுலாத்துறை ஆகியவற்றில் முதலீடுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.