காலையில் எழுந்தவுடன் சூடா டீ குடிக்கும் பழக்கம் உண்டா? ஜாக்கிரதையாக இருங்க! இந்த பிரச்சினைகளை ஏற்படுத்துமாம்


 பொதுவாக நம்மில் பலருக்கு காலையில் எழுந்தவுடனே பெட் டீ குடிக்கும் பழக்கம் உள்ளது.    

காலையில் தேநீர் அருந்தும் பழக்கம் மனதிற்கு ஒரு வகை அமைதியை தரலாம். ஆனால், இது உடல் ஆரோக்கியத்திற்கு அதிக கேடை விளைவிக்கும். ஏனெனில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் பல பக்க விளைவுகள் ஏற்படும். 

 அந்தவகையில் காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.  

காலையில் எழுந்தவுடன் சூடா டீ குடிக்கும் பழக்கம் உண்டா? ஜாக்கிரதையாக இருங்க! இந்த பிரச்சினைகளை ஏற்படுத்துமாம்

  • பெட் டீ குடிப்பதால் வரும் மிகப்பெரிய பிரச்சனை அசிடிட்டி, மலச்சிக்கல். இது செரிமான அமைப்புக்கு நல்லதல்ல.
  • காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் பித்த சாற்று செயல்முறை சரியாக நடக்காமல், உடலில் பதட்டம் உண்டாகிறது.
  • நீங்கள் அதிகமாக டீ குடித்தால், அது சிறிது நேரம் உங்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால் அது தூக்கக் கலக்கத்தை உண்டுபண்ணும்.
  • காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பதால், அதில் சர்க்கரை உள்ளடக்கம் இருப்பதால், உங்கள் எடையை இது வேகமாக அதிகரிக்கக்கூடும்.
  • பசியுடன் இருக்கும்போது டீ குடிப்பதால் அல்சர் பிரச்சனை வரக்கூடும். அதே போல் புரோட்டீன் குறைபாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.
  • பெட் டீ குடிப்பதால் நரம்பியல் பிரச்சனைகள் ஏற்படலாம். இதன் காரணமாக பசியின்மை ஏற்படும் அபாயமும் உள்ளது.
  • தேநீரில் காஃபின் அளவு அதிகமாக உள்ளது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.