சிறப்பு மருத்துவக் குழு 2வது நாளாக விசாரணை!
ஈரோட்டில் சட்ட விரோதமாக சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம். சிறப்பு மருத்துவக் குழு 2வது நாளாக இன்றும் விசாரணை . ஈரோடு மகிளா நீதிமன்ற அனுமதியின் பேரில் தரகர் மாலதியிடம் மருத்துவக்குழு, போலீசார் விசாரணை.
அணை நீர் மட்டம்
பவானிசாகர் அணை நீர்மட்டம் – 82.62 அடி, நீர் இருப்பு – 17.1 டிஎம்சி, நீர்வரத்து – 1,014 கனஅடி, நீர் வெளியேற்றம் – 1,005 கன அடி.
ராகுல்காந்தி கோரிக்கை- அமலாக்கத்துறை அனுமதி
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணையில் 4 நாட்கள் ஆஜராக விலக்களிக்க கோரி அமலாக்கத்துறைக்கு ராகுல் காந்தி கோரிக்கை. ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் ஜூன் 20ம் தேதி வரை ஆஜராவதில் இருந்து அமலாக்கத்துறை விலக்கு.
பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் 26வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்றும், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வரும் 20ம் தேதி முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.
“வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். வழக்கிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் உயர் நீதிமன்றம் வருவதை தவிர்க்க வேண்டும்” என்றும் நீதிபதி பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.
அக்னிபாத் போராட்டங்களை கருத்தில் கொண்டு, குர்கானில் நான்கு பேருக்கு மேல் கூடுவதை கட்டுப்படுத்தும் பிரிவு 144 இன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பள்ளிகளில் வெளியிட வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்துடன், தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நட த்தி வருகின்றனர். ஏற்கெனவே, சேலத்தில் ஈ.பி.எஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தம்பிதுரை பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பல மாநிலங்களில், போராட்டம் வெடித்த நிலையில், நாடு முழுவதும் 200 ரயில் சேவைகள் பாதிப்பு என தகவல் வெளியாகி உள்ளது.
சோனியா காந்தி மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கையில் கூறியுள்ளார்.
ஓ.பி.எஸ். தரப்பில் அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் மூன்றாவது நாளாக இன்றும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள், ரயில் பாதை மற்றும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் லக்கிசராய் நகரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் விக்ரம்ஷிலா விரைவுவண்டியின் மூன்று பெட்டிகளை எரித்துள்ளனர்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.இளமாறன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 169வது திரைப்படத்திற்கு ‘ஜெயிலர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி வழங்க ‘நியமனத்தேர்வு’ என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் ஆளுநர் மாளிகையை காங்கிரஸ் கட்சியினர் நேற்று முற்றுகையிட்ட விவகாரம் . சட்ட விரோதமாக கூடுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் 271 காங்கிரஸ் கட்சியினர் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு
சென்னை, மணலியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணமிழந்த பெருமாள் என்பவர் தூக்கிட்டு தற்கொலை. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக பணத்தை இழந்த பெருமாள், கடன் சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டார்
இலங்கை, மன்னார் பகுதியில் இருந்து 2 குடும்பத்தைச் சேர்ந்த 7 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளனர். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அகதிகளாக தமிழ்நாடு வருகை எனத் தகவல்