அமெரிக்காவில் தேவாலயத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி.!

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

வெஸ்டாவியா ஹில்ஸ் நகரில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் எபிஸ்கோபல் தேவாலயத்தில் நேற்றிரவு உணவு விருந்து நடைபெற்ற போது, உள்ளே புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில் 3 பேர் காயமடைந்த நிலையில், இருவர் உயிரிழந்ததாகவும் மற்றொரு நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.