அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. .
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, 47.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ஓட்டங்களை பெற்றிருந்த போது, மழைக் குறுக்கிட்டது. இதனால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.
குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா மற்றும் தசுன் சானக ஆகியோர் தலா 34 ஓட்டங்களை பெற்றனர்.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் குனெமன் மற்றும் மெக்ஸ்வேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஸ்வெப்ஸன் 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
டக்வத் லுயிஸ் முறைப்படி அவுஸ்ரேலிய அணிக்கு 43 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு 216 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிஇ 37.1 ஓவர்கள் நிறைவில் 189 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்தது.. இதனால், இலங்கை கிரிக்கெட் அணி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
கிளேன் மெக்ஸ்வெல் 30 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் சாமிக்க கருணாரத்ன மூன்று விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர, தனஞ்ச டி சில்வா மற்றும் துமித் வெல்லாலகே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாகஇ இலங்கை அணியின் சமிக்க கருணாரத்ன தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் இலங்கை அணி சமநிலைப்படுத்தியுள்ளது.