திருச்சி: கல்லணையில் காவிரி மேலாண்மை குழுவினர் ஆய்வு செய்யவுள்ள நிலையில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேகதாதுவில் அணை அமைப்பதற்காகவே மேலாண்மை குழு ஆய்வு செய்ய வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ய வருகை தந்துள்ளனர். முன்னதாக காவிரி மேலாண்மை ஆணைய குழுவினர் மேட்டூர் அணை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.