கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருக்கும் தாய்… ஆதரவின்றித் தவிக்கும் ஆறு வயது மகள்: ஒரு கவலையளிக்கும் செய்தி


ஜூலை மாதம் 8ஆம் திகதி கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட உள்ள ஒரு தாய்க்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள் முதலானோர் பேரணிகளில் இறங்கியுள்ளார்கள்.

Evangeline Cayanan என்ற பெண் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நாடுகடத்தப்பட உள்ள நிலையில், அவரது மகளும் கனேடிய குடிமகளுமான McKenna (6), தனக்கு கனடாவில் யாரும் இல்லாததால் தாயுடன் கனடாவை விட்டு வெளியேறும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.

2010ஆம் ஆண்டு Evangeline தற்காலிக வெளிநாட்டுப் பணியாளராக கனடாவுக்கு வந்துள்ளார். அவர் பணி செய்யும்போது தனக்கு பணி வழங்கிய இருவர் தன்னை துன்புறுத்தியதாகவும், பாரபட்சமாக நடத்தியதாகவும் புகார் செய்திருந்தார்.

அதற்கு பழிவாங்குவதற்காக அவர்கள் Evangeline மீது திருட்டுப் பழி போட்டதாக அவர் தெரிவிக்கிறார். ஆனால், அந்த திருட்டு நடந்ததாக கூறப்படும்போது தான் கனடாவிலேயே இல்லை என்கிறார் அவர்.

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருக்கும் தாய்... ஆதரவின்றித் தவிக்கும் ஆறு வயது மகள்: ஒரு கவலையளிக்கும் செய்தி

ஆக, Evangeline தனது பணி அனுமதியை இழந்திருக்கிறார். அவரால் அகதி நிலை கோரி விண்ணப்பிக்கவும் முடியாத ஒரு நிலை, 2015இல் அவர் ஆவணங்களற்றவர் என்ற நிலையை அடைந்துள்ளார்.

அதே வருடத்தில் McKenna பிறக்க, அவர் கனடாவில் பிறந்ததால் கனேடிய குடிமகளாகிவிட்டார்.

தற்போது Evangeline நாடுகடத்தப்பட உள்ள நிலையில், அவரது மகளுக்கு அவரைத் தவிர வேறு யாரும் இல்லாததால், வேறு வழியில்லாமல் McKennaவும் தாயுடன் பிலிப்பைன்ஸ் செல்லவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

McKennaவுக்கு, Attention Deficit/Hyperactivity Disorder (ADHD) என்னும் குறைபாடு முதலான பிரச்சினைகள் உள்ளதால், அவள் பிலிப்பைன்ஸ் செல்லும் நிலையில், அங்கு அதற்கான சரியான சிகிச்சைகள் பெற இயலாத நிலை உள்ளதாக Evangeline அஞ்சுகிறார்.

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருக்கும் தாய்... ஆதரவின்றித் தவிக்கும் ஆறு வயது மகள்: ஒரு கவலையளிக்கும் செய்தி

இந்நிலையில்தான், சமூக ஆர்வலர்களும், Evangelineஉடைய நண்பர்களும் அவரை நாடுகடத்தவேண்டாம் என கோரி அரசுக்கு விண்ணப்பித்துள்ளார்கள்.

Evangelineஉடைய சட்டத்தரணியான Manraj Sidhu, மனிதநேய மற்றும் கருணையின் அடிப்படையில் Evangelineஐ கனடாவில் தங்க அனுமதிக்கக்கோரி புதிதாக ஒரு விண்ணப்பம் அளிக்க இருக்கிறார்.

Evangelineஉடைய நண்பர்களும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான Marco Mendicinoவுக்கும், புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraserக்கும், Evangeline நாடுகடத்தப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரியும், அவருக்கு நிரந்தர வாழிட உரிமம் அளிக்கக் கோரியும் உருவாக்கியுள்ள மனு ஒன்றில் 2,000 பேர் கையெழுத்திட்டுள்ள நிலையில், மக்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக அதிகாரிகள் இந்த பிரச்சினையில் தலையிடுவார்கள் என நம்பிக் காத்திருக்கிறார்கள்.
 

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருக்கும் தாய்... ஆதரவின்றித் தவிக்கும் ஆறு வயது மகள்: ஒரு கவலையளிக்கும் செய்தி



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.