அமெரிக்க பாதுகாப்புத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ராதா ஐயங்கார் பிளம்ப் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு விவகாரங்களை கண்காணிக்கும் பென்டகனில் முக்கிய பதவிகளுக்கு ஐந்து பேரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். பாதுகாப்புத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ராதா ஐயங்கார் பிளம்ப் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அவர் பாதுகாப்பு துணை செயலாளர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறார். ராதா ஐயங்கார் தற்போது பாதுகாப்பு துணைச் செயலாளராகவும், தலைமைத் தளபதியாகவும் உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராதா ஐயங்கார் பிளம்பை பென்டகன் பதவிக்கு பரிந்துரைத்துள்ளார். ராதா அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு கூகுள், பேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்தார். கூகுளில் ஆராய்ச்சி பிரிவில் பணிபுரிந்தார். அதற்கு முன் பொருளாதார நிபுணராகவும் அனுபவம் பெற்றவர்.
பேஸ்புக்கில் கொள்கை பகுப்பாய்வின் உலகளாவிய தலைவராகவும் அவர் பணியாற்றி உள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் துறை, எரிசக்தித் துறை மற்றும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றில் தேசிய பாதுகாப்பு பிரச்னைகள் குறித்த பல மூத்த பதவிகளை வகித்துள்ளார். பிளம்ப் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் உதவி பேராசிரியராக இருந்தார். இவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் தனது முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.