ஹீரோவான இயக்குனர்
சாமிடா, சவுகார் பேட்டை, பொட்டு, தம்பி வெட்டோத்தி சுந்தரம் படங்களை இயக்கியவர் வி.சி.வடிவுடையான், சன்னி லியோன் நடிப்பில் வீரமாதேவி என்ற படம் தொடங்கப்பட்டு பின்னர் அந்த படம் கைவிடப்பட்டது. தற்போது ஜீவன், யாஷிகா ஆனந்த், ரித்திகா சென், மல்லிகா ஷெராவத் நடித்துள்ள பாம்பாட்டம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் இயக்கப்போகும் நாக பைரவா என்ற அடுத்த படத்தின் ஹீரோ அவர்தானாம். அதை அவரே அறிவித்திருக்கிறார். பிரபல இந்தி நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஜுலை 1 முதல் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. முழுக்க முழுக்க மும்பையில் முழு படப்பிடிப்பையும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
படம் குறித்து வடிவுடையான் கூறியதாவது: 1970 காலகட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஹாரர் திரில்லர் கலந்து இந்த கதையை உருவாக்கி உள்ளேன். 2000 ராஜபாளைய நாய்களும் ஆயிரக்கணக்கான மாம்பா பாம்புகளும் படத்தில் இடம்பெற இருக்கின்றன. தமிழ், தெலுங்கு. ஹிந்தி மொழிகளில் தயாராகிறது. என்கிறார் வடிவுடையான்.