குறுகலான முக்கொம்பு மேலணை புதிய பாலம்: 26-ம் தேதி ஸ்டாலின் புதிய அறிவிப்பு?

திருச்சியின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றானதும், காவிரியில் வெள்ளம் ஏற்பட்டால் வெள்ள நீரை வெளியேற்றும்  வடிகாலாகவும் அமைக்கப்பட்டதுதான் முக்கொம்பு மேலணை.

 இந்த அணை ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் தென்னிந்திய நீர்பாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படும். ஆர்த்தர் காட்டன் என்பரால் 1836-ம் ஆண்டில் ரூ. 2 லட்சம் செலவில்  கட்டப்பட்டது. இந்த அணையின் நீளம் 630 மீட்டர். 45 மதகுகளுடன் கட்டப்பட்டிருந்தது.

 இந்த நிலையில் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் காவிரியில் ஏற்பட்ட  வெள்ளப் பெருக்கில் முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே இருந்த இந்த அணையின் 7 மதகுகள் உடைந்தது

 இதனை அடுத்து அப்போதைய அதிமுக அரசு கொள்ளிடம் ஆற்றின் அனைத்து மதங்களையும் இடித்துவிட்டு புதிய மேலணையை கட்டத் துவங்கியது.

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 2021-ல் பதவி ஏற்ற திமுக தலைமையிலான தமிழக அரசு அதிமுக அரசு விட்டுச்சென்ற முக்கொம்பு மேலணை பணிகளை தொடர்ந்தது.இந்த நிலையில் திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை மற்றும் புதிய பாலத்திற்கான பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு இன்று காலை ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் கே.என் நேரு தெரிவிக்கையில்; திருச்சியில் 387.60 கோடி மதிப்பீட்டில் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.ஏறத்தாழ 95% பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

வருகிற ஜூன் 26-ம் தேதி தமிழக முதல்வர் திருச்சி வருகை தந்து 11 மணி அளவில் புதிதாக கட்டப்பட்ட முக்கொம்பு கொள்ளிடம் மேலணை பாலத்தை திறந்து வைக்கிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டிருந்த பழைய பாலத்தின் 9 மதகுகள் இடிந்து சேதம் ஆனாது.இந்நிலையில் இதற்கு மாற்றாக புதிய பாலம் மற்றும் கதவணை கட்ட திட்டமிடபட்டு பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த புதிய பாலம் பழைய பாலம் போலவே குறுகலான பாலமாக முந்தைய அதிமுக அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. கலைஞர் மாயனூர் பாலத்தை கட்டியபோது இருவழிப் பாதையாக இருக்கும் வகையில் கட்டினார்.ஆனால் இது குறுகளாக ஒரு வழிப்பாதையாக தான் உள்ளது, அதே நேரம் இந்த பாலத்தில் மேலும் சில புதிய விஷயங்களை கொண்டுவர உள்ளோம். அதை முதல்வர் தெரிவிப்பார்.

திருச்சியில் புதிய காவிரி பாலம் கட்ட ஏற்கனவே 90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது தற்போது 130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி நகரின் காவிரி ஆற்றில் புதிய பாலம் மற்றும் எக்பிரஸ் எலிவேட்டர் உள்ளிட்ட திட்டங்கள் விரைவில் துவக்கப்படும். மேகதாது புதிய அணை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு : நான் திருச்சி மந்திரி என்னிடம் திருச்சி கேள்விகளை மட்டும் கேளுங்கள் என்றார்.

 இந்நிகழ்வின்போது  மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் மாநகராட்சி மேயர் மு. அன்பழகன்,  சட்டமன்ற உறுப்பினர்கள் எம் பழனியாண்டி, .அ. சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார்,

.செயற்பொறியாளர்கள் ஆர்.கீதா மணிமோகன்,  சேர்மன் துரைராஜ் ஒன்றிய செயலாளர் கதிர்வேல், ரமேஷ், ராஜவேலு ஆகியோர் உள்பட பலர் உடனிருந்தனர்.

செய்தி:  சண்முகவடிவேல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.