தேனி மாவட்டம் கம்பம், அனிஷ் தோப்பு, மணிக்கட்டி ஆலமரம் பகுதிகளில் வருகிற 26 ஆம் தேதி கிடா முட்டு சண்டை போட்டி நடத்த அனுமதி கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து விட்டது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று ஏற்கனவே 2 முறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பொதுநல வழக்காக தாக்கல் செய்தது எப்படி என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
கிடா முட்டு சண்டைபோட்டியை நடத்த வேண்டும் என்று யாரும் அடிப்படை உரிமையாக கோர முடியாது என்றும் கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.