அமெரிக்காவில் இருந்து யூரியா இறக்குமதி.. இந்த முறை கொஞ்சம் ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா..?

இந்தியா, முதன்முறையாக, அமெரிக்காவில் இருந்து அதிகளவிலான யூரியாவை இறக்குமதி செய்ய உள்ளது.

இந்தியா அமெரிக்காவில் டெக், ஆயுதம், விமானம், கம்பியூட்டர் என பல இறக்குமதி செய்து வந்தாலும் இதுவரை யூரியா இறக்குமதி செய்தது இல்லை.

இந்த இறக்குமதி மூலம் இந்தியா – அமெரிக்கா மத்தியில் புதிய வர்த்தக பொருள் பரிமாற்றம் துவங்கியுள்ளது.

ஊழியர்களை வலை வீசி தோடும் அமெரிக்க நிறுவனம்.. சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்..!

யூரியா இறக்குமதி

யூரியா இறக்குமதி

தென் கொரிய நிறுவனமான சாம்சங், இந்தியாவில் மங்களூருக்கு ஏற்றுமதி செய்வதற்காக அமெரிக்காவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் துறைமுகத்தில் சுமார் 47,000 டன் சிறுமணி (granular) யூரியா-வை ஏற்ற தயாராக வைத்து உள்ளது. சாம்சங் போன் தயாரிப்பு நிறுவனம் மட்டும் அல்ல பல துறையில் இந்நிறுவனம் அமைதியாக இயங்கி வருகிறது

யூரியா விலை

யூரியா விலை

சாம்சங் ஏற்றுமதி செய்யும் சிறுமணி யூரியா விலை ஒரு டன்னுக்கு $716.5 விலையில் வழங்கப்பட உள்ளது, மேலும் இதில் சரக்கு கூலி உள்ளது (CFR). படகுகளில் இருந்து ஏற்றுவதற்கு 10-15 டாலர் உடன் சேர்த்து ஒரு டன்னுக்கு கூடுதலாக $65 விதிக்கப்படுகிறது.

 FOB சலுகை
 

FOB சலுகை

ஆனால் இந்தியாவுக்கு US சரக்குக் கட்டணம், அதனுடன் தொடர்புடைய இலவச-ஆன்-போர்டு அல்லது FOB சலுகை இருக்கும் காரணத்தால் சரக்கு ஏற்றும் கூலி இருக்காது. இதனால் ஒரு டன்னுக்கு $635-640 ஆக இருக்கும்.

அமெரிக்கா யூரியா ஏற்றுமதி

அமெரிக்கா யூரியா ஏற்றுமதி

அமெரிக்கா இதுவரை எப்போதாவது தான் இந்தியாவுக்கு யூரியா ஏற்றுமதி செய்துள்ளது. 2019-20ல் வெறும் 1.47 டன்னாகவும், 2020-21ல் 2.19 டன்னாகவும், 2021-22ல் 43.71 டன்னாகவும் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் கூறுகிறது.

 

முக்கிய நாடுகள்

முக்கிய நாடுகள்

இந்தியா, 2021-22ல், 6.52 பில்லியன் டாலர் மதிப்புள்ள 10.16 மில்லியன் டன் யூரியாவை இறக்குமதி செய்தது. இதில் சீனா-வில் இருந்து மட்டும் 2.79 மில்லியன் டன் யூரியாவை இறக்குமதி செய்துள்ளது. சீனாவை தொடர்ந்து ஓமன் (1.62 மில்லியன் டன்), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (1.06 மீ. டன்), எகிப்து மற்றும் உக்ரைன் (தலா 0.75 மீ. டன்), கத்தார் (0.58 மீ. டன்) மற்றும் சவுதி அரேபியா (0.50 மெ. டன்) ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

Russia – Ukraine Crisis: ஜோ பைடன் 41 நிமிட போன் கால்.. அமெரிக்கா, சீனா எடுத்த முடிவு..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India imports large quantity of urea from the USA for first time

India imports large quantity of urea from the USA for first time அமெரிக்காவில் இருந்து யூரியா இறக்குமதி.. இந்த முறை கொஞ்சம் ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா..?

Story first published: Friday, June 17, 2022, 20:23 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.