பனிப்போரில் வெற்றியடைந்ததை தொடர்ந்து, அமெரிக்கர்கள் தங்களை இந்த உலகத்தின் தூதர்கள் என அறிவித்துக் கொண்டனர் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற பொருளாதார மன்றத்தில் உரையாடிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது உரையில் கடவும் முதல் டான்பாஸ் வரை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரஷ்ய ஜனாதிபதியின் உரையில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளை கடுமையாக சாடியதுடன் மட்டுமில்லாமல், எதிர்காலம் குறித்த மிகவும் அழுத்தமான தனது கூற்றுகளையும் வெளிப்படுத்தினார்.
Putin spoke at the economic forum in St. Petersburg:
▪The United States, declaring victory in the Cold War, declared itself the “messengers of the Lord on earth.” pic.twitter.com/pLXpXZRuyk
— ТРУХА⚡️English (@TpyxaNews) June 17, 2022
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் சில முக்கிய கருத்துகள்:
அமெரிக்கா:
அமெரிக்கா பனிப்போரில் வென்றதில் இருந்து, தன்னை இந்த உலகத்திற்கான கடவுளின் தூதராக அறிவித்துக் கொண்டது, பொறுப்பில்லாத மக்களின் ஆர்வங்களே புனிதங்கள் எனவும் அறிவித்துக் கொண்டனர்.
இந்த முறையானது தற்போது ஒருவழிப்பாதையாகிவிட்டது, இதனால் உலகம் நிலைத் தன்மை அற்றதாக மாறிவிட்டது என குற்றம்சாட்டினார்.
மேற்கத்திய நாடுகள்:
அவர்களது காலணியில் அனைத்து நாடுகளும் இருப்பதாக மேற்கத்திய நாடு கருதுகின்றன, மேலும் அவர்கள் தங்களை தனித்துவமானவர்கள் என்றும், மற்றவர்கள் இரண்டாம் தர குடிமக்கள் என கருதுவதாகவும் தெரிவித்தார்.
மேற்கத்திய நாடுகள், கடந்த நூற்றாண்டின் அடிப்படையிலேயே இன்னமும் சிந்திக்கிறார்கள் மற்றும் மிகப்பெரிய மாயையில் இருக்கிறார்கள், அத்துடன் அவர்கள் மாற்றத்தை கவனிக்க விரும்புவது இல்லை எனத் தெரிவித்தார்.
பொருளாதார தடைகள்:
ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் ஒருபோதும் வெற்றி அடையாது, பொருளாதார தடைகள் என்பது ஒற்றை கத்தியின் இரண்டு கூர்மையான பக்கங்களை போன்றது எனத் தெரிவித்தார்.
சிறப்பு ராணுவ நடவடிக்கை:
சிறப்பு ராணுவ நடவடிக்கையானது, டான்பாஸ் மக்களை பாதுகாக்கவே மேற்கொள்ளப்பட்டதாகும், ஆனால் அவற்றில் ரஷ்யாவை குற்றம்சாட்டி, தங்களது சொந்த தவறுகளை மூடி மறைக்க பயன்படுத்திக் கொள்கின்றனர் எனத் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: 70 வயது மூதாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்: கூரையில் கொட்டி விழுந்த பிரமாண்ட பரிசு பங்களா!