Poco X4 GT: மற்றுமொரு போக்கோ போன்; 144Hz ரெப்ரெஷ் ரேட், 67W சார்ஜர்… இன்னும் பல அம்சங்கள்!

Poco X4 GT Launch Date: போக்கோ எக்ஸ்4 ஜிடி ஸ்மார்ட்போன் ஜூன் 23ஆம் தேதி உலகளவில் வெளியிடப்படுகிறது. நிறுவனத்தின் X தொடரின் கீழ் Poco X4 GT அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த போனின் வெளியீடு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் நேரலையாக ஒளிபரப்பப்படும் செய்யப்படும்.

இந்த ஸ்மார்ட்போன் குறித்த அரசு தகவல் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் ஒழுங்குமுறை ஆணையத்தின் (TDRA) இணையதளத்தில் பார்க்கப்பட்டது. இந்த போன் ரெட்மி நோட் 11டி ப்ரோ (Redmi Note 11T Pro) போனின் மறுபெயரிடப்பட்ட ஸ்மார்ட்போனாகும்.

Airtel 5G: ஏர்டெல் 5ஜி; அல்ட்ரா பாஸ்ட் இன்டர்நெட்டுக்கு தயாரா? வெளியாகும் தேதி அறிவிப்பு!

போக்கோ எக்ஸ்4 ஜிடி எப்போது வெளியாகிறது?

Poco X4 GT ஜூன் 23 அன்று அறிமுகம் செய்யப்படுகிறது. வெளியீட்டு நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இதை நிறுவனத்தின் யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்களில் பயனர்கள் காணலாம்.

Galaxy F13: சாம்சங்கின் பட்ஜெட் கிங் கேலக்ஸி எஃப்13 விரைவில்… இவ்ளோ பெரிய பேட்டரியா!

புதிய போக்கோ எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போனுடன், நிறுவனத்தின் Poco F4 5G ஸ்மார்ட்போனும் அறிமுகமாகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் கிட்டத்தட்ட ஒரே விலைப் பிரிவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 11டி ப்ரோ அம்சங்கள் (Redmi Note 11T Pro Specifications)

இந்த போன் 6.6 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 144Hz ரெப்ரெஷ் ரேட்டைக் கொண்டிருக்கும். மீடியாடெக் டைமென்சிட்டி 8100 சிப்செட் இதில் நிறுவப்பட்டுள்ளது.

Nothing Phone (1): லைட் எல்லாம் மின்னுது… வெளியான நத்திங் போனின் வீடியோ!

இந்த ஸ்மார்ட்போனானது 8ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பக ஆதரவைப் பெறுகிறது. ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதன் முதன்மை சென்சார் 64 மெகாபிக்சல்கள் கொண்டதாக இருக்கும்.

POCO F4 5G: ஜூன் 23 அறிமுகமாகும் போக்கோ எஃப்4 5ஜி போன்; இதுவரை கிடைத்த தகவல்கள்…

இந்த போனை சக்தியூட்ட 5080mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை சக்தியூட்ட 67W வேகமான பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் கிடைக்கும். இரண்டு புதிய போக்கோ போன்களும் நடுத்தர வகை மக்களை கவரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Poco-X4-GT விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்MediaTek Dimensity 1200 5Gடிஸ்பிளே6.6 inches (16.76 cm)சேமிப்பகம்128 GBகேமரா64 MP + 8 MP + 2 MPபேட்டரி5000 mAhஇந்திய விலை21864ரேம்6 GBமுழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.