மதுரை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு வருவோர் ஜூன் 20 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், ஜூன் 20 முதல் உயர் நீதிமன்ற கிளைக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உயர் நீதிமன்றக் கிளை நிர்வாக நீதிபதி பி.என்.பிரகாஷ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நீதிபதி பி.என்.பிரகாஷ் கூறும்போது, ”தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா 3 அலைகளில் இருந்து தப்பித்து வந்துள்ளோம். இதனால் பாதுகாப்பு கருதி ஜூன் 20 முதல் வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வழக்குகளில் தொடர்பு இல்லாதவர்கள் உயர் நீதிமன்றம் வருவதை தவிர்க்க வேண்டும்” என்றார்.