திரைப்பட போஸ்டர் ஒட்ட லஞ்சம் தர மறுத்த நடிகர் கார்த்தி ரசிகர் மன்றத்தினரை தாக்கிய புகாரில் தூத்துக்குடி போலீசார் மூவருக்கு தலா 2 லட்ச ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் கார்த்தியின் ‘தோழா’ படம் வெளியான போது அதன் போஸ்டரை ஒட்ட திரவிய ரத்தினராஜ் என்ற காவலர் லஞ்சம் கேட்டதாகவும், அதனை தர மறுத்த மூவரை காவல்நிலையத்தில் வைத்து ஆய்வாளர் சுரேஷ், எஸ்.ஐ. ரவிக்குமார் உள்ளிட்டோர் தாக்கியதாகவும் புகார் மனு தாக்கல் செய்யபட்டது.
இதனை விசாரித்த மனித உரிமை ஆணையம், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.