அக்னிபாத் திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும்! ராணுவத்தளபதி மனோஜ் பாண்டே

டெல்லி: அக்னிபாத் திட்டத்தின்படி, ஆட்சேர்ப்பு செயல்முறையின் அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று ராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்து உள்ளர். அடுத்த 2 நாட்களுக்குள் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.மத்தியஅரசு கடந்த 14ந்தேதி அன்று ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்க்கும் திட்டமான அக்னிபாத் என்ற திட்டத்தை அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட் டம் வன்முறையாக ரயில்கள் உள்பட வாகனங்கள் எரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், விரைவில் அக்னிபாத் திட்டத்தின்கீழ் முதல்பேட்ச் ஆள் சேர்ப்புக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியதுடன், http://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில்  வெளியிடப்படும் என்றார்.

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த மேஜர்ஜெனரல் மனோஜ்பாண்டே,  இளைஞர்கள் அனைவரும் போராட் டத்தை கைவிட்டு விட்டு, அக்னி வீரர்களாக இணைய வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறாததால் வாய்ப்புகளை இழந்த இளைஞர்களின் நலனுக்காக அரசாங்கம் வயது வரம்பை 23ஆக அதிகரித்துள்ளது. இது இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு, இதை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.