வாஷிங்டன்:அமெரிக்காவில், 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு, அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அனுமதி அளித்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளிலும், 12 வயதுக்கு மேற்பட்ட வயதினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட வில்லை.இந்நிலையில், அமெரிக்காவில், 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அனுமதி அளித்துள்ளது. இதில், 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு இரு டோஸ், ‘மாடர்னா’ தடுப்பூசி செலுத்தவும், 6 மாதம் முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கு மூன்று டோஸ், ‘பைஸர்’ தடுப்பூசி செலுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சி.டி.சி., எனப்படும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அனுமதி கிடைத்த பின் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கும் என தெரிகிறது.
வாஷிங்டன்:அமெரிக்காவில், 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு, அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அனுமதி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.