பவானி அருகே கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே மண் தொழிலாளர் வீதி சின்ன ஆற்றோரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக பவானி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த விஜயன், பாப்பம்பட்டி மணி, மாணிக்கம் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரின் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.