செல்வ மகள் திட்டத்தில் சேமிப்பவர்கள் கவனத்திற்கு… அடுத்த மாதம் முதல் வட்டி உயர வாய்ப்பு!

suganya samudrika scheme Tamil News: சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண் குழந்தைக்கான சிறு சேமிப்புத் திட்டம். இந்த திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த சேமிப்புத் திட்டம், தங்கள் பெண் குழந்தைகளின் கல்விக்காகப் பணம் திரட்ட பெற்றோர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்வி மற்றும் பள்ளிப்படிப்புடன், பெண் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு ஒரு முதலீடாகவும் இது உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது.

சமீப காலமாக இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த திட்டம் தொடர்பாக அரசு சார்ப்பில் விழிப்புணர்வும் மேற்கொள்ளப்படுகிறது. போஸ்ட் ஆபீஸ், பொதுத்துறை வங்கியின் மூலம் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

இந்நிலையில், வரும் ஜூலை மாதம் முதல் இந்த திட்டத்தில் வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ppf,nsc, ssy இந்த திட்டத்தின் வட்டி விகிதங்கள் உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று நம்பப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெப்போ விகிதத்தை மீண்டும் 0.50 சதவீதம் உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவெடுத்த பிறகு, இந்த சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஜூன் இறுதிக்குள் அதிகரிக்கப்பட உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரிசர்வ் வங்கிவெளியிட்ட அறிவிப்பின் படி ரெப்போ விகிதத்தை ஒரு மாதத்தில் 90 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதனால் அரசின் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.50 முதல் 0.75 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என தெரிகிறது. வரும் ஜூலை 1 முதல், ​​பொது வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்பு, என்எஸ்சி ஆகிய அரசு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020-21 முதல் காலாண்டில் இருந்து சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஏப்ரல் 1, 2022 முதல் தொடங்கி ஜூன் 30, 2022-ல் நிறைவடையும். நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிற்கான இந்த சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிடும் வரை வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.