புதுடெல்லி: உலகிலேயே அதிக மழைப்பொழிவுள்ள இடம் மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியாகும். இந்நிலையில், 122 ஆண்டுகளுக்கு பின் மூன்றாவது முறையாக இங்கு அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரே நாளில் 811.6 மி.மீ. மழை பதிவானது. இதனை தொடர்ந்து நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 972மி .மீ. மழை பதிவாகி உள்ளது. இது, 122 ஆண்டுகளில் 3வது அதிகபட்சம். நேற்று வரை இந்த மாதத்தில் மொத்தம் 4081.3 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கவுகாந்தி பிராந்திய விஞ்ஞானி சுனித் தாஸ் கூறுகையில், ”1956ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி 973 மிமீ மழை பெய்துள்ளது. 1995ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி 1563.3மி.மீ. மழை பெய்துள்ளது. அதற்கு முன் ஜூன் 15ம் தேதி 930 மி.மீ. மழை பெய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை 50-60 செ.மீ. மழை பெய்வது சாதாரணமாகும். 80 செ.மீட்டருக்கு அதிகமாக பெய்வது வழக்கதிற்கு மாறானது,” என்றார்.