வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்-அமெரிக்காவில், 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு, அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அனுமதி அளித்துள்ளது.
இந்தியா உட்பட பல நாடுகளிலும், 12 வயதுக்கு மேற்பட்ட வயதினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இந்நிலையில், அமெரிக்காவில், 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அனுமதி அளித்துள்ளது.
இதில், 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு இரு டோஸ், ‘மாடர்னா’ தடுப்பூசி செலுத்தவும், 6 மாதம் முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கு மூன்று டோஸ், ‘பைஸர்’ தடுப்பூசி செலுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சி.டி.சி., எனப்படும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அனுமதி கிடைத்த பின் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கும் என தெரிகிறது.
Advertisement