கூகுள் டிரைவ், விபிஎன் மற்றும் டிராப்பாக்ஸ் ஆகியவற்றை மத்திய அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரசின் பாதுகாப்பு அம்சங்கள், ரகசியங்கள் உள்ளிட்டவற்றை கூகுள் டிரைவ் உள்ளிட்டவற்றில் மத்திய அரசு ஊழியர்கள் தற்போது சேமித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ஆவணங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள் விபிஎன் மற்றும் கிளவுட் சர்வீஸ்களான கூகுள் டிரைவ், டிராப்பாக்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தவும், அதில் தகவல்களை சேமிக்கவும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தடை
இந்திய கம்ப்யூட்டர் ஏஜென்சிஸ் ரெஸ்பான்ஸ் குழு மற்றும் தேசிய புள்ளியல் மையம் ஆகியவை இணைந்து செய்த பரிந்துரை காரணமாக மத்திய அரசின் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூகுள் ட்ரைவ்
இந்த உத்தரவை அடுத்து மத்திய அரசு ஊழியர்கள் அரசின் ரகசிய ஆவணங்கள், தகவல்கள் ஆகியவற்றை கூகுள் ட்ரைவ் மற்றும் டிராப் பாக்ஸில் சேமிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய சுய விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை சேமித்து கொள்ளலாம்.
புதிய விதிகள்
மத்திய அரசின் முக்கிய தகவல்களை பாதுகாக்கும் நோக்கில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் இந்த புதிய விதிகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபிஎன் சேவை
நாட்டிற்கு அச்சத்தை ஏற்படுத்த கூடிய, தீவிரவாதிகள் அதிகம் பயன்படுத்தும் விபிஎன் சேவை மிகவும் ஆபத்தானது என்றும் அதில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால் கண்டுபிடிப்பதும், அதை பின் தொடர்வதும் கடினம் என்பதாலும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
முக்கிய அம்சங்கள்
இதுகுறித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் என்னென்ன முக்கிய அம்சங்கள் உள்ளன என்பதை தற்போது பார்க்கலாம்.
* மத்தியஅரசின் ரகசிய தகவல்கள் மற்றும் பாதுகாக்கப்படும் தகவல்கள் ஆகியவற்றை அரசு ஊழியர்கள் க்ளவுட் சேவையில் சேமித்து வைக்கக் கூடாது.
* விபிஎன் சேவை பயன்படுத்துவதற்கு தடை
* மூன்றாவது பார்ட்டியின் செயலிகள் மூலம் அரசு ஆவணங்களை ஸ்கேன் செய்ய கூடாது.
* அரசு ஊழியர்கள் தங்களது கம்ப்யூட்டர்களை ரூட் அல்லது ஜெயில்பிரேக் செய்யக்கூடாது.
* அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் சைபர் பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
* விபிஎன் நிறுவனங்கள் தங்களின் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை கட்டாயம் சேகரித்து வைத்திருக்க வேண்டும்
* மேற்கண்ட அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் தாராளமாக இந்தியாவிலிருந்து வெளியேறி கொள்ளலாம்.
Central bans government employees for using Google Drive and vpn services
Central bans government employees for using Google Drive and vpn services | கூகுள் டிரைவில் தகவல்களை சேமிக்க தடை: அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு உத்தரவு!