சென்னை: ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் படமும் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் இருந்த பேனர் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய மறைந்த தலைவர்கள் இருக்கும் பேனர் வைக்கப்பட்டுள்ளது.