சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4.40 சதவீதத்திலிருந்து 4.90 சதவீதமாக உயர்த்தியதை அடுத்து பிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பிக்சட் டெபாசிட் முதலீட்டிற்கான வட்டியை உயர்த்தி வருகின்றன.
அந்த வகையில் ஜூன் 15ஆம் தேதி முதல் பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டியை உயர்த்திய HDFC வங்கி, தற்போது ஜூன் 17ஆம் தேதி முதல் மீண்டும் வட்டியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டு உள்ளதால் அந்த வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்யும் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் உள்ளதாகவே கருதப்படுகிறது.
ஒரே ஒரு எழுத்தை மாற்றி மோசடி: கவனமா இருங்க HDFC வங்கி வாடிக்கையாளர்களே!
HDFC வங்கி
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான HDFC வங்கி ஒரே வாரத்தில் இரண்டு முறை வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து, அந்த வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பிக்சட் டெபாசிட்
ஏற்கனவே ஜூன் 15 முதல் பிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்திய HDFC வங்கி தற்போது கூடுதலாக 0.25 சதவீதம் உயர்த்தியதாக அறிவித்துள்ளது. இந்த வட்டி உயர்வு பொது முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி சீனியர் சிட்டிசன்களுக்கும் கிடைக்கும் என்பதால் பிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சீனியர் சிட்டிசன்களுக்கு இரண்டாவது முறையாக கூடுதலாக 0.50 சதவீதம் வட்டி உயர்த்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
HDFC வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தின்படி ஜூன் 17 முதல் பிக்சட் டெபாசிட்டுகளுக்கு வழங்கப்படும் புதிய வட்டி விகிதங்கள் குறித்து தகவல் இதோ:
பொது வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதம்
7 – 14 நாட்கள் : 2.75%
15 – 29 நாட்கள் : 2.75%
30 – 45 நாட்கள் : 3.25%
46 – 60 நாட்கள் : 3.25%
61 – 90 நாட்கள் : 3.25%
91 நாட்கள் – 6 மாதம் : 3.75%
6 மாதம் – 9 மாதம் : 4.65%
9 மாதம் – 1 ஆண்டு : 4.65%
1 ஆண்டு : 5.35%
1 ஆண்டு – 2 ஆண்டு : 5.35%
2 ஆண்டு – 3 ஆண்டு : 5.50%
3 ஆண்டு – 5 ஆண்டு : 5.70%
5 ஆண்டு – 10 ஆண்டு : 5.75%
சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி விகிதம்
7 – 14 நாட்கள் : 3.25%
15 – 29 நாட்கள் : 3.25%
30 – 45 நாட்கள் : 3.75%
46 – 60 நாட்கள் : 3.75%
61 – 90 நாட்கள் : 3.75%
91 நாட்கள் – 6 மாதம் : 4.25%
6 மாதம் – 9 மாதம் : 5.15%
9 மாதம் – 1 ஆண்டு : 5.15%
1 ஆண்டு : 5.85%
1 ஆண்டு – 2 ஆண்டு : 5.85%
2 ஆண்டு – 3 ஆண்டு : 6%
3 ஆண்டு – 5 ஆண்டு : 6.20%
5 ஆண்டு – 10 ஆண்டு : 6.50%
நிலையான வருமானம்
பங்குச்சந்தை படுபாதாளத்தில் சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில், நிலையான வருமானம் தரும் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்வதே சிறந்தது என பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
8% வட்டி
கடந்த 2010 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் பிக்சட் டெபாசிட் முதலீடுகளுக்கு சுமார் 8% வரை வங்கிகள் வட்டி அளித்து வந்தன. வருங்காலத்தில் மீண்டும் 8% வட்டி உயர்வு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே பங்குச் சந்தையில் முதலீடு செய்து ரிஸ்க் எடுப்பதை விட பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்து எந்தவித கவலையுமின்றி இருக்கலாம் என்பதே பெரும்பாலான முதலீட்டாளர்கள் எண்ணமாக உள்ளது.
HDFC Bank hikes FD interest second time in a week
HDFC Bank hikes FD interest second time in a week | ஒரே வாரத்தில் 2 முறை உயர்த்தப்பட்ட வட்டி: HDFC வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்